Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பருத்தி இறக்குமதி வரி விலக்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதி வரி விலக்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட பருத்தி இறக்குமதி மீதான அடிப்படை சுங்கவரி மற்றும் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரி விலக்கு அக்.31 முடிவடைவதாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

பருத்தி இறக்குமதி மீதான வரி விலக்கை வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகப் போதிய பருத்தி கிடைக்காமலும், உலகச் சந்தையில் நிலவும் போட்டி காரணமாகவும் உற்பத்திச் செலவு அதிகரித்ததால், இந்தியாவில் ஆயத்த ஆடை, நூல் உற்பத்தித் துறையினர் நிதி நெருக்கடியை சந்தித்து வந்தனர்.

உள்நாட்டுச் சந்தையில் பருத்தி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் இந்திய நிறுவனங்கள் சரிசமமாகப் போட்டியிடவும் பருத்தி இறக்குமதி வரிக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்புகள், மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட பருத்தி இறக்குமதி மீதான அடிப்படை சுங்கவரி மற்றும் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரி விலக்கு நேற்று (அக். 31) முடிவடைவதாக இருந்தது.

இந்நிலையில், ஜவுளித் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு வரிச் சலுகை காலத்தை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரி விலக்கு சலுகை வரும் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி ஆலைகளுக்குத் தேவையான பருத்தி கிடைக்கும் என்று ஜவுளித் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
டாடா குழும நிகழ்வுகளைக் கண்காணிக்கிறோம்: செபி தலைவர்
அடுத்த செய்தி
வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் 55% அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்